சிறுமியிடம் சில்மிஷம் மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது - வள்ளியூரில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக மதபோதகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையை சேர்ந்த செல்வராஜ் (52). இவர் வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தில் ஜெபவீடு வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஜெபவீட்டிற்கு ஒரு குடும்பம் வந்து சென்றுள்ளது. இதில் 8வயது சிறுமி ஜெப வீட்டில் சிறு உதவிகள் செய்து வருவது வழக்கம் என தெரிகிறது. இந்நிலையில் செல்வராஜ் அந்த சிறுமியிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷம் செய்து வந்துள்ளார்,
இது குறித்து சிறுமி தனது குடும்பத்தினரிடம் கூறவே வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பள்ளி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்வராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.