பண்ருட்டியில் ஸ்ரீஅம்மாஅறக்கட்டளை மற்றும் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்புதூய்மைபணி சத்யா பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ., இன்று காலை நேரில் ஆய்வு
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பண்ருட்டி ஸ்ரீ அன்பு அம்மாஅறக்கட்டளை மற்றும் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகள், தொரப்பாடி,மேல் பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள் ஆகியவைஇணைந்து பல்வேறு தடுப்புநடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பண்ருட்டிபஸ்நிலையம், காய்கனி மார்க் கெட், காந்தி ரோடு, நான்கு முனை சந்தி ப்பு, ராஜாஜி சாலை, அரசுமருத்துவமனை, கும்பகோணம் சாலை, லிங்க் ரோடு, சென்னை சாலை, கடலூர் ரோடு பகுதி களில் தினமும்கிரிமி நாசினி தெளிப்பு தூய்மை பணி நடந்து வருகிறது. இன்று காலை பண்ருட்டி காமராஜர் நகர்பகுதியில்நடைபெற்றகிரிமி நாசினி தெளிப்புதூய்மைபணியை சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங் கினார். உடன்பண்ருட்டி நகராட்சிஆணை யாளர்பிரபாகரன், பொறியாளர் சிவசங்கர்,ஸ்ரீ அம்மா அறக்கட்டளை தலைவர் தொழிலதிபர் சீனுவாசன் பன்னீர் செல்வம், கே.என்.சி.மோகன், ராஜேந்திரன், செந்தில் முருகா, ராம்குமார், நகராட்சி துப்புரவு அலுவலர் பாக்கியநாதன், பணி மேற்பார்வையாளர் சாம்பசிவம்ஆகியோர் உடனிருந்தனர். படம் .. பண்ருட்டி காமராஜ் நகரில் நடைபெற்றகிரிமி நாசினி தெளிப்பு தூய்மைபணியை சத்யாபன்னீர்செல்வம்.,எம்.எல்.ஏ.,நேரில் பார்வையிட்டுஆலோசனை வழங்கினார். அருகில் கமிஷனர் பிரபாகரன்உள்ளிட்டோர்.
" alt="" aria-hidden="true" />